Asianet News TamilAsianet News Tamil

Dharmapuri Crime: தருமபுரியில் பரபரப்பு; முகம் சிதைக்கப்பட்டு சிறார் கொடூர கொலை - போலீஸ் விசாரணை

தருமபுரி மாவட்டத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் 16 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

16 years old boy killed by suspicious persons in dharmapuri vel
Author
First Published Jun 13, 2024, 11:56 AM IST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள தாசம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு, 16 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம், முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பென்னாகரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பென்னாகரம் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அனாதையாக இறந்து கிடந்தவருக்கு இந்து முறைப்படி இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள் - வேலூரில் நெகிழ்ச்சி சம்பவம்

விசாரணையில் பென்னாகரம் அருகே உள்ள பண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட திப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாள் மற்றும் குமுதா ஆகிய தம்பதியினரின் மூத்த மகன் யாதவன் என தெரிய வந்துள்ளது. யாதவன் பண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு திப்பட்டியில், பெருமாள் குமுதா ஆகியோர் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குமுதா கோபித்துக் கொண்டு, தனது தாய் வழியில் உறவினர் வீடான தாசம்பட்டிக்கு வந்துள்ளார். 

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இளைய மகன் வால்பாறையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் தனது பாட்டி வீட்டில் இருந்த யாதவன், திப்பட்டிக்குச் சென்று தனது தந்தையை சந்தித்துவிட்டு வருவதாக  நேற்று மாலை கூறி சென்றவன், இன்று காலை தாசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே மர்மமான முறையில், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழில்நுட்ப கோளாறு; சென்னையில் இருந்து 5 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூர் புறப்பட்ட விமானம் - பயணிகள் அவதி

பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios