தர்மபுரியில் ஏரியில் மூழ்கி 12 வயது சிறுமி உயிரிழப்பு; காவல் துறையினா் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஏரியில் மூழ்கி 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசி கிராமத்தை சேர்ந்த தீர்த்தகிரி (எ) சங்கர் இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதியினருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் திவ்யா என்கிற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். இன்று திவ்யா உட்பட நான்கு தோழிகள் மெணசி - விழுதுப்பட்டி சாலையில் உள்ள குட்டையில் குளிக்க சென்றுள்ளனர்.
குளித்துவிட்டு பின் மூன்று தோழிகளும் கரைக்கு வந்து வந்துள்ளனர். ஆனால் திவ்யா மட்டும் குட்டையில் மீன் பிடித்து இருந்ததாக கூறப்படுகிறது. திடிரென திவ்யா வின் அலறல் சத்தம் கேட்ட மூன்று சிறுமிகளும் உடனே அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அரூரில் பேருந்துக்காக காத்திருந்த 4 பெண்களிடம் சில்மிஷம் செய்த காவலர்
அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரத்திற்கு மேலாக போராடி சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளித்துவிட்டு மீன் பிடிக்கச் சென்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.