திமிரும் தீட்சதர்கள்..! திணறும் அதிகாரிகள்..! சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடப்பது என்ன..?
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு செலவு கணக்குகள் குறித்த விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு செலவு கணக்குகள் குறித்த விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர்.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது பொதுமக்கள் பக்தர்கள் ஏறி வழிபட சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில், நடராஜர் கோயில் கனக சபையில் ஏற்றி வழிபட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபடச் சென்றார். இதற்கு தீட்சிதர்கள் அவரை வழிபட விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்ததனர். இந்நிலையில், தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என கடந்த 17ம் தேதி அரசாணை வெளியிட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்றை பெற்றது. ஆனால், இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அறநிலையத்துறைக்கும், கோவில் தீட்சிதர்களுக்கும் மோதல் போக்கு உருவானது.
இதனையடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையால் உருவாக்கப்பட்ட குழுவினர் 7, 8ம் தேதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாக கடந்த மாதம் 26ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதற்கு சிதம்பரம் நடராஜர் கோவில் தரப்பி, 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கூறி ஆட்சேபனை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கடந்த மாதம் 30ம் தேதி இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கு ஆட்சேபனை கடிதம் ஒன்றை எழுதினர்.
தொடர்ந்து அதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கமிஷனர் கண்ணன் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினர். அதைத் தொடர்ந்து தீட்சிதர்கள் பதில் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர் அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தற்போது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகளை திரும்ப பெறவும் அராசணையை திரும்ப பெறவும் மீண்டும் கோரப்பட்டது.. தவறினால் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என பொதுதீட்சிதர்களின் செயலாளர் எஸ்.ஹேமசபேச தீட்சிதர் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் வருகை புரிந்தார். தொடர்ந்து நடராஜர் கோயில் உள்ளே சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கோயில் உள்ளே அமர்ந்து தீட்சிதர்கள் இடையே ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது ஒத்துழைப்பு அளியுங்கள். எதையுமே தடுப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் ஒத்துழைப்பு கொடுங்கள் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பழனி திருக்கோவில் இணை ஆணையர் நடராஜன், கடலூர் மாவட்ட அறநிலையத்துறை துணை ஆணையாளர் ஜோதி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை புரிந்தனர். அப்போது, தீட்சிதர்கள் கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலையத்துறை விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர்.