சிதம்பரம் அருகே கல்லூரியில் சீட் கிடைக்காததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்துகொண்டதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

சிதம்பரம் அருகே கொடியாளம் கிராம ரோட்டு தெருவைச் சேர்ந்த கணேசன் இவரது மகள் கார்த்திகா வயது 19 இவர் பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் எந்த கல்லூரியிலும் சீட் கிடைக்கவில்லை இதனால் மனம் உடைந்து விரக்தியில் இருந்து வந்துள்ளார் கார்த்திகா.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தின் கீழ் கார்த்திகா விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கார்த்திகா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் தாலுகா காவல் நிலைய துணைக் காவல் ஆய்வாளர் நாகராஜ் புகார் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரியில் சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடியாளம் கிராமத்தில் பெரும் பரபரப்பும் சோகமும் நிறைந்து காணப்படுகிறது.