Asianet News TamilAsianet News Tamil

நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து விபத்து.. ஒருவர் பலி... 15 பேர் படுகாயம்..!

நெய்வேலியில் என்.எல்.சி 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

NLC second thermal power plant Boiler blast...15 people injured
Author
Cuddalore, First Published Jul 1, 2020, 11:31 AM IST

நெய்வேலியில் என்.எல்.சி 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில், 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 

NLC second thermal power plant Boiler blast...15 people injured

இந்நிலையில், 5வது யூனிட்டில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது 18 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும், 5 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

NLC second thermal power plant Boiler blast...15 people injured

தற்போது என்.எல்.சி, தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  கடந்த ஏப்ரல் 8ம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios