தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல்? அதிரவைக்கும் பகீர் தகவல்...
கேரளாவில் மட்டுமே வேலையை காட்டி வந்த வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மட்டுமே வேலையை காட்டி வந்த வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாகியுள்ளது, இதில் கடந்தாண்டு மட்டும் இந்த நீபா வைரஸ் பாதிப்பினால் 17 பேர் பலியாகினர். அதேபோல இந்தாண்டும் கேரள கல்லூரி மாணவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல அவரது உறவினர்கள், நண்பர்களும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில், கேரள - தமிழக எல்லைப் பகுதியில் டாக்டர்கள் டீம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்ததில் நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள பூவிழுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கூலி வேலை செய்துவரும் ராமலிங்கம் ஆவார். இவர் கேரளாவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பாகக் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கேரளாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பினார். கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட ராமலிங்கம், ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகரிக்கவே, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகடைந்த டாக்டர்கள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு ராமலிங்கத்திடம் அறிவுறுத்தினர்.
அதனடிப்படையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமலிங்கம், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் தனிப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே மத்திய சோதனைக் கூடத்திற்கு அனுப்பட உள்ளதாகவும், ரிசல்ட் வந்த பிறகே அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.