கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி மதுபிரியர்களுக்கு புதுவரவாக 5 லிட்டர் பீர் கேன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மதுப்பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுவுக்கு புகழ் பெற்ற புதுச்சேரி மதுப்பிரியர்களின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வரும் நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சிறப்புடன் கொண்டாட புது வகையான மது வகைகள் அறிமுகம் செய்யப்படுள்ளது. இவற்றில் மதுப்பிரியர்களை பெரிதும் கவர்ந்தது காஷ்மீரிலிருந்து வரவழைக்கப்பட்ட 5 லிட்டர் கேன் பீர் தான்.

இந்த 5 லிட்டர் லெகர் பீர் 2100, ஸ்ட்ராங் பீர் 2000-க்கும் கிடைக்கும், ஒருமுறை மட்டுமே இந்த கேனை பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 5 லிட்டர் பீரின் கடைசி சொட்டு வரை அதனுடைய தரம், சுவை மாறாமல் இருக்கும் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா செல்லும்போது மிக மிக எளிய அளவில் எடுத்துச் செல்லக் கூடியதும் பாதுகாப்பும் கொண்டதாக பீர் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.