மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி HMஐ உள்ளாடையோடு இழுத்து வந்த மக்கள்
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை அப்பகுதி மக்கள் உள்ளாடையோடு ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் அருகே செயல்பட்டு வரும் விஇடி பள்ளியில் விருத்தாசலம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில்பட் பிலிப்ஸ் என்பவர் பொறுப்பு வகித்த வருகிறார். இந்நிலையில் தலைமை ஆசிரியர் எடில்பட் பிலிப்ஸ் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அவ்வபோது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் மாணவிகளுடன் முத்தம் கொடுப்பது, கட்டி அணைப்பது உள்ளிட்ட புகைப்படங்களை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டு அவ்வபோது அதனை மாணவிகளிடம் காட்டி மிரட்டல் விடுத்து தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியரின் செல்போன் தவறுதலாக வேறொருவரின் கையில் சிக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு; 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமாம்
அப்போது அந்த போனை ஆய்வு செய்த நபர் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த புகைப்படங்களை எருமனூர் மற்றும் சுற்றுவட்டார கிராம இளைஞர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பினார். இதனால் தலைமை ஆசிரியர் மீது ஆத்திரமடைந்த கிராம மக்கள் பள்ளி முன்பாக ஒன்று கூடினர். மேலும் கிராம மக்கள் மற்றும் தலைமை ஆசிரியர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அவன் கூட பழகாதனு சொன்னா கேக்க மாட்டியா? சகோதரியை கொன்று தொங்விட்ட அண்ணன்
பேச்சுவார்த்தையின்போது தலைமை ஆசிரியர் சற்று ஆணவகமாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தலைமை ஆசிரியரை அடித்து ஆடைகளை அவிழ்த்து உள்ளாடையோடு விருத்தாசலம் காவல் நிலையம் நோக்கி ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த விருத்தாசலம் காவல் துறையினர் உடனடியாக பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால், அதற்குள் ஊர் பொதுமக்கள் தலைமை ஆசிரியரை உள்ளாடையோடு சாலையில் அழைத்து வந்துகொண்டிருந்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்து தலைமை ஆசிரியரை மீட்ட காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.