Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசு அனுமதி தந்த மறுநாளே மாஸ் காட்டும் மா.சு... தமிழகத்தில் முதன் முறையாக இன்று முதல் ஆரம்பம்...!

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, இன்று திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொண்ணாடம் பகுதியில் "கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி"திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

First time in tamilnadu vaccination for pregnant women started from today
Author
Pennadam, First Published Jul 3, 2021, 1:21 PM IST

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் அதிகம் என நிபுணர்கள் குழு பரிந்துரை அளித்ததை அடுத்து, கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் மற்ற பெண்களை விட கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிகிறது.

First time in tamilnadu vaccination for pregnant women started from today

மேலும் தற்போதைய ஆய்வின் படி கர்ப்பிணி பெண்களுக்கோ, அவர்களின் கருவுக்கோ தடுப்பூசியால் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மத்திய அரசு கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முதன் முறையாக இன்று கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 

First time in tamilnadu vaccination for pregnant women started from today

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, இன்று திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொண்ணாடம் பகுதியில் "கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி"திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.   தமிழகம் முழுவதும் உள்ள 7 லட்சத்து 38 ஆயிரத்து 583 கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

First time in tamilnadu vaccination for pregnant women started from today

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படாமல் தொடர்கிறது. நேற்று மட்டும் ஒரு லட்சத்து 60க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4 ஆயிரத்து 252 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது என்பது உண்மை, ஆனால் தற்போது மத்திய அரசு வழங்கிய தொகுப்பிலிருந்து தடுப்பூசி செலுத்தும் பணி தடையில்லாமல் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios