Asianet News TamilAsianet News Tamil

நெய்வேலியில் புதிய அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து! 5 தொழிலாளர்கள் படுகாயம்..!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நெய்வேலி பகுதியில் 3 சுரங்கங்களை அமைத்து பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

Fire accident at new thermal power plant in Neyveli! 5 workers injured..!
Author
First Published Dec 22, 2022, 2:23 PM IST

நெய்வேலியில் புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நெய்வேலி பகுதியில் 3 சுரங்கங்களை அமைத்து பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில் ஆகும்.

இதையும் படிங்க;- கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை..! சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எத்தனை பேருந்துகள் தெரியுமா.?

Fire accident at new thermal power plant in Neyveli! 5 workers injured..!

இந்நிலையில், அண்மையில் நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் கட்டமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். உடல்முழுவதும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- சென்னையில் பயங்கரம்.. திடீரென ரயில் முன் பாய்ந்த பெண் வழக்கறிஞர்.. அலறி அடித்து ஓடிய பயணிகள்..!

Follow Us:
Download App:
  • android
  • ios