தவறான சிகிச்சையால் பாதிப்பு; உறுப்பு தானம் செய்வதாக கூறி பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உடல் உறுப்புகளை தானமாக பெற்றுக் கொள்ளுங்கள் என கூறி பெட்ரோல் கேனுடன் வந்த குடும்பத்தினரால் பரபரப்பு.

family members protest government doctors in cuddalore government hospital for mistreatment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் பத்மாவதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுகவின் வாக்கால் அமோக வெற்றி பெற்ற பாஜக 

அதன் பிறகு அவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 நாட்களாக எவ்வித சிகிச்சையும் அளிக்காததால், உறவினர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது பத்மாவதிக்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பிரசவத்தின் போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளதும், அதனால் தான் வயிறு வலி ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

இந்நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று குற்றம் சாட்டிய உறவினர்கள், நாங்கள் இங்கேயே தற்கொலை செய்து கொள்கிறோம். அதன் பின்னர் எங்கள் உடல் உறுப்புகளை தானமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios