திருமணமான 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை... பெண் என்ஜினீயர் தற்கொலை..!
வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கணவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கணவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலுார் முதுநகர், சங்கரநாயுடு தெருவைச் சேர்ந்தவர் பாவாடை மகன் பாவேந்தன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் சபீனா (21) என்ற என்ஜினீயருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 36 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்து பிரிட்ஜ், வாஷிங் மிஷின், இருசக்கர வாகனம் வாங்கித் தருவதாக பெண் வீட்டார் கூறியிருந்தனர். ஆனால், வாங்கித்தரவில்லை.
இந்நிலையில், சீர்வரிசை பொருட்களை கேட்டு சபீனாவை கணவர் பாவேந்தன் மற்றும் அவரது தந்தை பாவாடை, தாய் அஞ்சா ஆகியோர் துன்புறுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த அவர் கடந்த மாதம் 30-ம் தேதி இரவு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து சபீனாவின் தந்தை சரவணன் கொடுத்த புகாரின் பேரில் பாவேந்தன், அவரது தந்தை பாவாடைசாமி, தாயார் அஞ்சா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்