Asianet News TamilAsianet News Tamil

பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவரை தரையில் அமரவைத்து அவமரியாதை.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

சிதம்பரம் அருகே பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சிமன்ற பெண் தலைவரை தரையில் அமர வைத்து ஊராட்சி மன்ற கூட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Disrespect to the Panchayat President female
Author
Cuddalore, First Published Oct 10, 2020, 10:53 AM IST

சிதம்பரம் அருகே பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சிமன்ற பெண் தலைவரை தரையில் அமர வைத்து ஊராட்சி மன்ற கூட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்குதிட்டை பஞ்சாயத்து பெண் தலைவர் ராஜேஸ்வரி என்பவரும் துணைத்தலைவருமான மோகன் என்பவரும் இருந்து வருகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி நடைபெற்ற ஊராட்சித் கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலானது. 

Disrespect to the Panchayat President female

இதைத்தொடர்ந்து புவனகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது நடந்த சம்பவம் உண்மைதான் என்று தெரியவந்தது. பின்னர், துணைத்தலைவர் மோகன் மற்றும் ஊராட்சி மன்ற செயலர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்தபோது உயரதிகாரிகளுக்கு புகார் அளிக்காத ஊராட்சி செயலாளர்  சிந்துஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இதேபோல திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் பெண் ஊராட்சிமன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios