Asianet News TamilAsianet News Tamil

Watch : கடலூரில் சூறைக்காற்றுடன் கனமழை! அடியோடு சாய்ந்த 500 ஏக்கர் வாழை மரங்கள்! - விவசாயிகள் வேதனை!

கடலூரில் பெய்த திடீர் காற்று மழையால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்து வாழைமரங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
 

Cuddalore with heavy rain! 500 acres of banana trees leaning to the bottom! - Farmers suffering!
Author
First Published Jun 6, 2023, 2:16 PM IST

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு திடீரென பலத்த காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக கடலூர், ராமாபுரம், ஒதியடிக்குப்பம், கேப்பர் மலையை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் பயிரிடப்பட்ட 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன.


இந்த வாழைமரங்கள், இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்ய தயாராக இருப்பதாகவும், இரவு திடீரென வீசிய பலத்த காற்று காரணமாக வாழை மரங்கள் கடும் சேதம் அடைந்து விட்டது என்று வாழை விவசாயிகள் கண்ணீரோடு தெரிவிக்கின்றனர்.

ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்து உள்ளோம் என்றும், இந்த திடீர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios