கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதன் பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. 

திட்டக்குடி அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதன் பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் 100 மீட்டர் தூரம் அளவிற்கு இழுத்து சென்று வேப்ப மரத்தின் மீது மோதி அப்பளம் போல் நொறுங்கியது. 

காரில் இருந்த 2 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடதத்திற்கு விரைந்தத போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

மேலும், உயிரிழந்த 4 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.