வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மோதல்; அமைச்சர் முன்பாக நாற்காலிகளை பறக்கவிட்ட விசிக நிர்வாகிகள் - கடலூரில் பரப்ப

திட்டக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

clash between 2 gangs of vck members india alliance meeting in cuddalore vel

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் திமுக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது மேடையில் அமைச்சர் கணேசன் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். 

விஜயதாரணியிடம் ரூ.20 கோடி வாங்குங்க: சீமான் காட்டம்!

அப்பொழுது திடீரென  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தற்போதைய மாவட்ட செயலாளர் திராவிட மணி, முன்னாள் மாவட்ட செயலாளர் பிலிப் குமார் ஆகிய இரண்டு கோஷ்டிகளுக்கும் மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் திணறினர். இதனால் அறிமுக கூட்டத்திற்கு வந்திருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலைந்து சென்றனர். 

Kamal Haasan : "திமுக ஏழைகளுக்கான அரசு என்பதை உணர்கிறேன்".. ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் கமல்!

பின்னர் காவல் துறையினர் மேடையில் தகராறில்  ஈடுபட்டவர்களை கீழே இறக்கி விட்டனர். கீழே வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் கூட்டத்தை முடித்துக் கொண்டு பாதியிலேயே கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios