கோவை அருகே பெட்ரோல் பங்கில் ரகசிய கேமிரா வைத்து பெண்கள் உடை மாற்றுவதை ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்த ரசித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் உடை மாற்றும் அறையில் செல்போனை வைத்து வீடியோ எடுத்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

கோவையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு பெண்கள் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பணிக்கு வந்த பின்னர் வீட்டில் இருந்து அணிந்து வரும் உடைகளை மாற்றி விட்டு பெட்ரோல் பங்கில் கொடுக்கும் உடைகளை அணிவது வழக்கம். இவ்வாறு பெண்கள் தங்களது உடைகளை மாற்றுவதற்காக பிரத்யேகமாக பெட்ரோல் பங்குகளிலும் தனியாக பெண்களுக்கு அறைகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெண்கள் உடை மாற்றும் அறையில் ஆண் ஊழியர் ஒருவர் பெண் ஊழியர்களை ஆபாசமாக வீடியோ எடுத்த காட்சி வேகமாக பரவி வருகிறது. அதில்,  5 பெண்கள் வரிசையாக வந்து ஆடைகளை மாற்றும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.