இரு தினங்களாக தொடர்ந்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

ஆன்லைன் விளையாட்டுக்களின் டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் சொல்லிக் கொடுப்பதாக கூறி யூ-டியூப்பில் சிறுவர், சிறுமிகளிடம்
ஆபாசமாக பேசி வந்த பப்ஜி மதனை போலீசார் நேற்று தருமபுரியில் கைது செய்தனர். அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட மதனிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த விசாரணையில் பெண்களுக்கு பணம் கொடுத்து ஆபாசமாக பேச வைத்தது தெரியவந்தது. அதுமட்டுமல்ல தன்னை
ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வதாக காட்டிக் கொள்ளவும் பணம் கொடுத்து வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். தன்னுடைய
வீடியோக்களை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக புகழ்ந்து பேசுவதற்காகவும், திட்டுவதற்காகவும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5
லட்சம் வரை பெண்களுக்கு பணம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதில் மதனின் முக்கியமான பெண் தோழி ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

அதுமட்டுமின்றி யூ-டியூப்பில் ஆபாச பேசி லட்சங்களில் சம்பாதித்த மதன், தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வருமான வரி செலுத்தவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மதனிடம் பணத்தைக் கொடுத்து பறிகொடுத்தவர்களுக்கு அதனை திரும்ப பெற்றுத்தரும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

இரு தினங்களாக தொடர்ந்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.