கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பணத்தை  இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

சென்னை அருகே போரூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் 15 லட்சத்தை இழந்த விரக்தியில் பிரபு என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை போரூர் அடுத்த விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் பிரபு(39). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததார். இவர் கடந்த ஒரு வருடங்களாக வேலைக்கு போகாமல் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் 15 லட்சம் ரூபாய் கடனாக பெற்று விளையாடி பணத்தை இழந்துள்ளார். 

இந்நிலையில், வாங்கிய கடனை திரும்பி கொடுக்க முடியாமல் பிரபு விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரபு உடலை கைப்பற்றி பிரேதத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.