Asianet News TamilAsianet News Tamil

ஆகஸ்ட் 15-க்கு பிறகு பொது போக்குவரத்து தொடங்கப்படுமா? தயார் நிலையில் போக்குவரத்து கழகங்கள்..!

தமிழகத்தில் வரும் 15-ம் தேதிக்கு பிறகு பேருந்து சேவையை தொடங்குவது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Will public transport start after August 15?
Author
Chennai, First Published Aug 11, 2020, 12:04 PM IST

தமிழகத்தில் வரும் 15-ம் தேதிக்கு பிறகு பேருந்து சேவையை தொடங்குவது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Will public transport start after August 15?

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் 20 ஆயிரம் அரசுபேருந்துகள்  முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகஸ்ட் 31ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பொது போக்குவரத்து வசதியை படிப்படியாக தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

Will public transport start after August 15?

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 15-ம் தேதிக்கு பிறகு பேருந்து சேவையை தொடங்குவது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டால், அதற்கு ஏற்ற வகையில் செயல்பட பேருந்துகளை தயார்படுத்தி வருகின்றனர். இதனிடையே, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் எடப்பாடி பள்ளிகள் திறப்பு, பொது போக்குவரத்து தொடக்கம் தொடர்பாகவும் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios