Night Curfew: தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்.. அரசு பேருந்துகள் இயக்கப்படுமா? முக்கிய தகவல் இதோ.!

தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருவதை அடுத்து இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஆகையால், அரசு  மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

Will government buses run during the night curfew?

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். அதில், இரவு நேர ஊரடங்கு தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. 

Will government buses run during the night curfew?

இந்நிலையில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இன்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல்  காலை 5 மணிவரை ஊரடங்கு  அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

Will government buses run during the night curfew?

எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது  மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள்,  மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள் (பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்) ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Will government buses run during the night curfew?

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள்இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios