சென்னையில் சுட்டெரிக்கும் வெப்பம்! டெல்லியை விட ஆபத்தான நிலை: தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 2ஆம் தேதி முதல் வெப்பம் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம் முடிந்ததை அடுத்து சென்னையில் வெப்பநிலை டெல்லியை விட ஆபத்தான அளவுக்கு இருப்பதாக தனியார் வானிலை அறிவிப்பாளர் பிரதீப் ஜான் தெரிவத்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போது தென் சென்னையில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. கிழக்குக் கடற்கரை சாலையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும் காற்றில் ஈரப்பதம் 69% ஆகவும் உள்ளது. உண்மையில் இந்த வெப்பநிலை 63 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உள்ளது” எனக் கூறியுள்ளார்.
“இது டெல்லியைவிட சென்னையின் நிலைமை ஆபத்தாக இருப்பதைக் காட்டுகிறது. டெல்லியில் இப்போது 25% ஈரப்பதத்துடன் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது” எனவும் தெரிவித்திருக்கிறார்.
ராதிகாவுடன் ‘க்ரூஸ் டிரிப்’ செல்லும் ஆனந்த் அம்பானி! கண்டிஷன் போட்டு விருந்தினர்களுக்கு அழைப்பு!
முன்னதாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 2ஆம் தேதி முதல் வெப்பம் குறையும் என்றும் ஜூன் 1ஆம் தேதி வரை அதிக வெப்பமாக இருக்கும் என்றும் கணித்துள்ளார்.
இதனிடையே, தென்மேற்குப் பருவமழை கேரளாவில் இன்று தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கத்தைவிட சில நாட்கள் முன்பாக தென்மேற்குப் பருவமழை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"நான் நவீன் பாபுவின் முன்கள வீரன்!" ஒடிசாவில் பாஜகவை தெறிக்கவிடும் வி.கே. பாண்டியன்!