சென்னையில் இளைஞர் ஒருவர் என்ன வாழ்க்கைடா இது, காசு இல்லைன்னாயாரும் மதிக்க மாட்டேங்கறாங்க என்று வாட்ஸ்அப்பில் ஸடேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்கையில் பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் பகுதியில் உள்ள 5-வது தெருவைச் சேர்ந்தவர் மன்சூர். இவர் ராயபுரத்தில் உள்ள பகோடா கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் மன்சூருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இரவு பணி முடிந்து கவலையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த நண்பனிடம் பணம் இல்லையெனில் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று புலம்பி உள்ளார்.  

பின்னர்  தனது படுக்கை அறைக்கு சென்ற மன்சூர், காலையில் வெகுநேரமாக அறையில் இருந்து வெளியே வராததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். இதனையடுத்து கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மன்சூர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மன்சூர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்த போது என்ன வாழ்க்கைடா இது. காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டுறாங்க, வாழ்க்கைக்கு குட்பை" என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.