சமைக்கும் போது துர்நாற்றம்... கெட்டுப் போன இறைச்சியால் நிறுத்தப்பட்ட திருமணம்...!
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு ஆய்வகம் மற்றும் மெட்ராஸ் கால்நடை கல்லூிக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை கிண்டி பகுதியில் உள்ள ஆர்.ஆர். பிரியாணி உணவகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு டன் ஆட்டு இறைச்சி மற்றும் 200 கிலோ கோழி இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து இந்த இறைச்சி பதப்படுத்தும் வசதி கொண்ட வாகனத்தில் சென்னை கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
திருமண நிகழ்ச்சிக்காக ஆர்டர் செய்யப்பட்ட இறைச்சியை சமைக்கும் போது துர்நாற்றம் வீசியதை அடுத்து மன்னார்குடியில் நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதை அடுத்து ஆர்.ஆர். பிரியாணி உணவகம் கெட்டுப் போன இறைச்சியை பதப்படுத்தும் வசதி கொண்ட வாகனத்தில் மன்னார்குடியில் இருந்து சென்னை கிண்டி பகுதியில் உள்ள தனது உணவக வளாகத்திற்கு கொண்டு வந்துள்ளது.
கெட்டு போன இறைச்சி:
ஆர்.ஆர். உணவகத்திற்கு சுமார் மூன்று டன் கெட்டு போன இறைச்சி வந்து இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு ஆய்வகம் மற்றும் மெட்ராஸ் கால்நடை கல்லூிக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இங்கு இறைச்சி எந்த வகையை சேர்ந்தது என்ற ஆய்வு நடத்தப்பட இருக்கிறது.
ஆர்.ஆர். பிரியாணி நிறுவனம் திருமணத்திற்கு சமைப்பதற்கான இறைச்சியை ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஜொமாட்டோ நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது. இதற்காக கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து 3.5 டன் ஆட்டு இறைச்சி, 12 ஆயின் சிக்கன் லெக் பீஸ் மன்னார்குடிக்கு பதப்படுகத்தும் வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. இது பற்றி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.