தமிழகத்துக்கு வரும் 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் கூறினார்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம், டெல்லியில் நடந்தது. குழுவின் தலைவர் நவீன்குமார் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். அடுத்த மாதம் கர்நாடகா திறக்க வேண்டிய நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின் குழுவின் தலைவர் நவீன்குமார் அளித்த பேட்டியில், ‘‘கர்நாடக அணைகளில் இருந்து வரும் 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்கள் அனைத்தும் பெங்களூருவில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படாமல், இம்முறையில் டெல்லியில் கூட்டம் நடந்தது.