போலீசாரை கெட்டவார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர்.!

51வது வார்டுக்குட்பட்ட அந்த பகுதியின் கவுன்சிலர் பெண் என்ற நிலையில் அங்கு நின்றிருந்த அனைவரும் ஆண்கள் என்பதால் யார் அந்த கவுன்சிலர் சொல்லுங்க? என்று போலீசார் திரும்ப கேட்க அங்கு நின்றிருந்தது கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் என்பது தெரியவந்தது.

viral video... dmk councillor husband jagadeesan removed

சென்னை வண்ணாரப்பேட்டையில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் பெண் கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் கெட்ட வார்த்தையால் திட்டிய வீடியோ வைரலானதை அடுத்து திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

போலீசாருடன் வாக்குவாதம்

சென்னை வண்ணாரப்பேட்டை ஜெ.பி.கோவில் தெரு பகுதியில் காவலர்கள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கும்பலாக நின்று கொண்டு சாலையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றவர்களை அவரவர் வீட்டுக்கு கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதற்கு கும்பலில் இருந்த ஒருவர் தாங்கள் எந்த தவறும் செய்யாத நிலையில் ஏன் விரட்டுகிறீர்கள்? என கேள்வி கேட்டதோடு, கெட்ட வார்த்தையால் திட்டினர். தங்களோடு இந்த ஏரியா கவுன்சிலரும் இருப்பதாக கூறினார்.

viral video... dmk councillor husband jagadeesan removed

கெட்ட வார்த்தையால் திட்டிய திமுக நிர்வாகி

51வது வார்டுக்குட்பட்ட அந்த பகுதியின் கவுன்சிலர் பெண் என்ற நிலையில் அங்கு நின்றிருந்த அனைவரும் ஆண்கள் என்பதால் யார் அந்த கவுன்சிலர் சொல்லுங்க? என்று போலீசார் திரும்ப கேட்க அங்கு நின்றிருந்தது கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் என்பது தெரியவந்தது. இவர் சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ரசிகர் மன்ற செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஜெகதீசன் உள்ளிட்ட 4 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

viral video... dmk councillor husband jagadeesan removed

சஸ்பெண்ட்

இந்நிலையில், ஜெகதீசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருடன் திமுகவினர் தொடர்பு வைக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். அவர் மீதான புகார்கள் பற்றி விசாரிப்பதும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios