வேல்ஸ் கல்விக்குழுமத்தில் 3 நாட்களாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் 300 கோடி ரூபாய் வரி ஏய்வு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் குழுமத்திற்குச் சொந்தமாக பல்லாவரம், தாழம்பூர், ஈஞ்சம்பாக்கம், தெலங்கானா மாநிலம் நிசாமாபாத், விகாராபாத் ஆகிய இடங்களில் பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. இதன் நிறுவனராக ஐசரி கணேஷ் உள்ளார். இந்நிலையில், சென்னை ஈசிஆரில் அமைந்துள்ள இவரது வீடு உள்ளிட்ட தமிழகம், மற்றும் தெலங்கானாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்திற்குச் சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர்.

மேலும் சேத்துப்பட்டுவில் உள்ள ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனத்தில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஏரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் ரூ.300 கோடி வருவாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வேல்ஸ் குழும தலைவர் ஐசரி கணேஷிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.