தமிழகம் முழுவதும் வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய 27 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

தேர்தல் நேரத்தில் வேல்ஸ் குழுமத்திற்குச் சொந்தமாக பல்லாவரம், தாழம்பூர், ஈஞ்சம்பாக்கம், தெலங்கானா மாநிலம் நிசாமாபாத், விகாராபாத் ஆகிய இடங்களில் பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. இதன் நிறுவனராக ஐசரி கணேஷ் உள்ளார்.

இந்நிலையில், சென்னை ஈசிஆரில் அமைந்துள்ள இவரது வீடு உள்ளிட்ட தமிழகம், மற்றும் தெலங்கானாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்திற்குச் சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேத்துப்பட்டுவில் உள்ள ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனத்தில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இங்கு சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் வருமானத்திற்கு ஏற்ப வரியை அரசுக்கு செலுத்தாத நபர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து வரியைப் பெறும் நடவடிக்கையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.