வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதால் சென்னைக்கு தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. காட்டுமன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரியானது இருக்கிறது. 

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். தற்போது ஏரியில் 45.45 அடியில் தண்ணீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 41 கனஅடி நீர் திறக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்மட்டமானது வேகமாக குறைந்து வருகிறது. தற்போது கோடைகாலம் காரணமாக சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 

இந்த நிலைமையை சமாளிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வீராணம் ஏரியில் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வைத்திருந்தது. தற்போது கோடைகால குடிநீர் தேவைக்காக அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு கொண்டிருப்பதால் நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. இப்படி ஒருபுறம் குறைந்தாலும் வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்தால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என்பதால்  கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

 

இதனால் காலை முதல் ஏரிக்கு 190 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது ஏரியின் நீர்மட்டமானது படிப்படியாக உயர தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து ஏரி நிரம்பும் வரையில் தண்ணீர் வரத்து  இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.