தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாக்கள் தொடர்பாகக் கூறப்படும் பல்வேறு முரண்பாடான தகவல்கள் எது உண்மை? மத்திய - மாநில அரசுகள் விளக்கவேண்டும் சுட்டிக்காட்டி கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 1. நீட்' தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட நாள் 1.2.2017.

2. அந்த இரு மசோதாக்களும் மத்திய அரசுக்குக் கிடைத்த தேதி 20.2.2017.

3. மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய தேதி 11.9.2017 (ஏழு மாதங்கள் கழித்து).

4. குடியரசுத் தலைவர் நிராகரித்த தேதி 18.9.2017.

தமிழக அரசுக்கு வந்த தேதி 22.9.2017.

5. தமிழ்நாடு அரசின் இரு மசோதாக் களும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட வில்லை; நிராகரிக்கப்பட்டதாக நிரூபித் தால், பதவி விலகத் தயார் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட அமைச்சர் திரு. சி.வி.சண்முகம் அறிவித்த தேதி 10.7.2019.

6. தமிழக மசோதாக்களை 2017 செப்டம் பரிலேயே மத்திய அரசு நிராகரித்துத் திருப்பி அனுப்பப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக் குரைஞர்கள் ஏ.குமரகுரு, டி.வி.கிருஷ்ண மாச்சாரி ஆகியோர் தெரிவித்த நாள் 16.7.2019.

முதலில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், பின்பு நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியுள் ளனர்!

இதற்கிடையே இன்னொரு தகவலும் முக்கியமானது.

புதிய அவசர சட்டம் கொண்டு வந்தால் ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை யில் செய்தியாளர்களிடம் தெரிவித்த தேதி 13.8.2017.

7. அவசர சட்டம் மத்திய அரசிடம் 14.8.2017 அன்று அளிக்கப்படும். இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை செய லாளர் ராதாகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். இன்று டில்லி செல்கிறார் என்று சொன்ன தேதி 14.8.2018.

8. தமிழக மசோதாக்களின் நிலை என்ன என்று தோழர் டி.கே.ரங்கராஜன்  குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதிய நாள் 17.4.2017.

9. அப்படியொரு மசோதா குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இதுவரை வரவே யில்லையென்று குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து பதில் வந்த நாள் 20.4.2017.

நீட்டிலிருந்து விலக்குக் கோரிய இந்த அவசரச் சட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் படித்துப் பார்க்காம லேயே நிராகரித்ததாக சர்ச்சை எழுந்துள் ளது. நீட்' தேர்வு தொடர்பாக வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணு கோபால் அவசரச் சட்டத்தை ஏற்று தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த சூழலில் தமிழக அரசின் அவசரச் சட்டம் மீது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கே.கே.வேணுகோபாலிடம் கருத்து கேட்டிருந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 23 ஆம் தேதியில்தான் நீட்'டிலிருந்து விலக்குக் கோரும் அவசரச் சட்டத்தின் நகலை உள் துறை அமைச்சகத்திடம் பெற்றதாக மத் திய சுகாதாரத் துறை தற்போது தெரிவித் துள்ளது!

ஆனால், இரு நாள்கள் முன்னதாகவே சுகாதாரத் துறை அளித்த கூடுதல் விவரங்கள்மூலம் நீட்'டிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று முன்பு எடுத்த முடிவுக்கு மாறாக மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணு கோபால் தெரிவித்தது ஏன்? நீட்' தேர்வு தொடர்பான அவசரச் சட்டம் தொடர்பான எந்தவிதமான ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. இதனால், படித்துப் பார்க்காமலேயே அவசரச் சட்டம் நிரா கரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

நமது கேள்வி, இதில் எது உண்மை?

மத்திய அரசு கூறுவது உண்மையா?

தமிழ்நாடு அரசு கூறுவது உண்மையா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய சட்ட அமைச்சர் நீட்'  மசோ தாக்கள் நிராகரிக்கப்படவில்லை; நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள் ளார். அப்படியானால், அந்தத் தகவலை அதன்பின் தமிழக சட்டமன்றம் பலமுறை கூடியுள்ளதே - அதில் தெரிவிக்கப்பட வில்லையே! தெரிவிக்காதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

ஒருபடி மேலே சென்று, நான் கூறுவது தவறு என்றால், பதவியை ராஜினாமா செய்வதாகவும் ஆவேசமாகப் பேசினார்.

(தேர்தல் பிரச்சாரத்தில்கூட இத்தகவல் களை - நீட்' தேர்வு விலக்குக்காக அ.தி. மு.க. ஆட்சி எழுதிய கடிதங்கள்பற்றிய தகவல்கள்கூட கூறப்படாதது ஏன்?)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (17.7.2019) பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு.கே.பழனிசாமி அவர்கள், நிராகரிக்கப் பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்கிறார். நிராகரிக்கப்படவில்லை என் கிறார் சட்ட அமைச்சர்; நிராகரிக்கப்பட்ட தாகக் கூறுகிறார் முதலமைச்சர்.

இதில் எது உண்மை?

என்னே முரண்கள்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட இரு மசோதாக்களும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டமும் - மத்திய அரசால் உரிய மதிப்போடு சீர்தூக்கிப் பார்க்கப்படாதது ஏன்?

மத்திய அரசு கொள்கை ரீதியாகவே சமுக நீதிக்கு எதிரானது;  தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு இதில் நடந்துகொண்ட விதம் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

மிக முக்கியமான பிரச்சினையில், உண் மைகளை மூடி மறைத்தது மன்னிக்கப் படவே முடியாதது  ஆகும்.

ஒட்டுமொத்தத்தில் பாதிக்கப்படுவது ஆண்டாண்டுகாலமாக சமுகநீதி பாதிக்கப் பட்ட மக்கள்தான்.

சிறப்பு சட்டமன்றம் கூட்டி விவாதிக் கப்படும் என்கிறார் முதலமைச்சர்! (குதிரை காணாமல் போன பிறகு லாயத்தை மூடும் புத்திசாலித்தனம் இது) விவாதிப்பதோடு நிற்கக்கூடாது - மீண்டும் புதிய மசோ தாவை நிறைவேற்றி, தமிழ் மண்ணுக்கே  உரித்தான சமுகநீதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பு! என அவர் கூறியுள்ளார்.