அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரயில் விபத்து! கன்றுக்குட்டி மீது மோதல்..!

நாட்டின் 5வது வந்தே பாரத் ரயிலையும், தென் மாநிலங்களுக்கான முதல் வந்தே பாரத் ரயிலான, மைசூரு-சென்னை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நவம்பர் 12ம் தேதி தொடங்கி வைத்தார்.

Vande Bharat on Mysuru- Chennai route cattle hit

சென்னை டூ மைசூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் அருகே கன்றுக்குட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வந்தேத பாரத் ரயில் சிறிது நேரம் பழுதடைந்து மீண்டும் இயக்கப்பட்டது. 

நாட்டின் 5வது வந்தே பாரத் ரயிலையும், தென் மாநிலங்களுக்கான முதல் வந்தே பாரத் ரயிலான, மைசூரு-சென்னை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நவம்பர் 12ம் தேதி தொடங்கி வைத்தார். மற்ற வந்தே பாரத் ரயில்களை விட இது நவீனமானது. அதிகபட்சமாக 180 கிமீ வேகத்தில் இந்த ரயிலால் செல்ல முடியும். இருப்பினும், சென்னை- மைசூர் இடையே இருக்கும் தண்டவாளத்தின் நிலைமை காரணமாக இதன் வேகம் 130 கிமீ-ஆக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க;- PM Visit to Bangalore:சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்: டிக்கெட்விவரம்

Vande Bharat on Mysuru- Chennai route cattle hit

இந்நிலையில், மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த போது கன்றுக்குட்டி மீது மோதியது. இதில், கன்றுக்குட்டி உடல் நசுங்கி ரத்த வெள்ளதத்தில் உயிரிழந்தது. இதனால், வந்தே பாரத் ரயில் பாதி வழியிலேயே சிறிது நேரம் நின்றது. சிறிது நேரம் நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் சென்னை நோக்கி இயக்கப்பட்டது. 

Vande Bharat on Mysuru- Chennai route cattle hit

ஏற்கனவே குஜராத் காந்தி நகர்- மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது முறை கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கி முன்பக்கம் பகுதி பழுதடைந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- Vande Bharat Express Train Accident Today:வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது முறையாக மாடுகள் மீது மோதி விபத்து

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios