Asianet News TamilAsianet News Tamil

மதிப்புக் கூட்டுவரியை அதிரடியாக அதிகரித்த தமிழக அரசு... பெட்டோல், டீசல் விலை தமிழகத்தில் கிடுகிடு உயர்வு!

பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் டீசல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரி உயர்வால், இன்று நள்ளிரவு முதல் இவற்றின் விலை உயர்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்கிறது.
 

Value added tax increased for petrol; and diesel in tamil nadu
Author
Chennai, First Published May 3, 2020, 9:42 PM IST

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டுவரியை உயர்த்தியதால், அவற்றின் விலை முறையே லிட்டருக்கு 3.25 ரூபாயும், 2.50 ரூபாயும் உயர்கிறது.Value added tax increased for petrol; and diesel in tamil nadu
கொரோனா தொற்று நோய் காரணமாக உலகமே லாக்டவுன்களால் முடங்கிக் கிடக்கிறது. அதன் காரணமாக சர்வதேச சந்தையில் முன் எப்போதும் இல்லாத அளவில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாகச் சரிந்துள்ளது. இருந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இவற்றின் விலையைக் குறைக்கக்கோரி எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தபோதும், மத்திய அரசு அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. Value added tax increased for petrol; and diesel in tamil nadu
இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அர இன்று வெளியிட்டது. பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் டீசல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரி உயர்வால், இன்று நள்ளிரவு முதல் இவற்றின் விலை உயர்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் உயர்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios