கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துவரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 370ஐ எட்டிய நிலையில், பொதுச்சமூகத்திற்கு கொரோனா பரவாத வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கை மக்கள் பின்பற்றிவருகின்றனர். இதற்கிடையே, இன்றைப்போலவே, மார்ச் 31ம் தேதி வரை இந்தியாவில் 75 மாவட்டங்களை முற்றிலும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களையும் முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதனால் மக்கள் பயப்பட வேண்டியதில்லை. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது என்று தெரிகிறது. உணவு, பால் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவை கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. அதனால் பயப்பட தேவையில்லை. இதுகுறித்த விரிவான தகவல்கள் கிடைத்ததும் அவை குறித்து தெரிந்துகொள்வோம்.