சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தரமற்ற குடிநீர் நிரப்பப்பட்ட கேன்கள் விநியோகிக்கப்படுவதைக் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கிட்டத்தட்ட 5000 சுகாதாரகேடான கேன்களை பறிமுதல் செய்திருகின்றனர்.

சென்னை உணவுப் பாதுகாப்பு மண்டலத்தில் 24 குடிநீர் ஆலைகள் இருக்கிறது. இவைகளில் இருந்து கேன்களில் நிரப்பிய பின்பு நீரானது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விநியோகம் செய்யப்படுகின்றன. இவற்றில் சில கேன்களில் மாசுற்ற நீர் இருப்பதாகவும், அது மட்டுமல்லாமல் அனுமதியின்றி குடிநீர் கேன்கள் தயாரிக்கப்படுவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் வகையில், இன்று ( சென்னை கொளத்தூர், கோயம்பேடு, வேளச்சேரி ஆகிய மூன்று இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

வாகனங்களில் இருந்து கொண்டுவரப்படும் குடிநீர் கேன்களை இன்று காலையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்  குழு, அவற்றில் இருக்கும் விவரங்களைச் சோதனையிட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஸ்டிக்கர் இருக்கிறதா, தயாரிப்பு தேதி இடம்பெற்றிருக்கிறதா, நீர் அசுத்தமாக உள்ளதா என்று கண்டறியப்பட்டது. இதில் நிறைய தண்ணீர் கேன் நிறுவனங்கள் தரமற்ற குடிநீர் கேன்களில் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் சோதனை நடத்திய அதிகாரிகள்.