Asianet News TamilAsianet News Tamil

Chennai Traffic Change: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி.. சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதே வேளையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும் வகையில் பல மாற்றத்திற்கான திட்டங்களைக் வரையறுத்து செயல்படுத்தி வருகின்றனர்.

Traffic change on Chennai Tailors Road tvk
Author
First Published Feb 6, 2024, 7:02 AM IST

வாகனங்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் டெய்லர்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதே வேளையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும் வகையில் பல மாற்றத்திற்கான திட்டங்களைக் வரையறுத்து செயல்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த இதுபோன்ற பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி.. இன்று ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் மின்தடையா?

வாகனங்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் போக்குவரத்தில் இத்தகைய மாற்றத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை டெய்லர்ஸ் சாலையில் புதிய போக்குவரத்து மாற்றத்தை ஏற்பாடு செய்துள்ளது. 

இப்போக்குவரத்து மாற்றத்தில் டெய்லர்ஸ் சாலையில் இருந்து கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி நோக்கி செல்லும் வாகனங்கள் கட்டாயமாக இடதுபுறம் திரும்பி 100 மீட்டர் சென்று ஈக சந்திப்பில் உள்ள U-திருப்பத்தை பயன்டுத்தி கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த நவீன மாற்றுப்பாதையின் நோக்கம் டெய்லர்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை கூர்ந்து கண்காணிப்பதற்கு ஏதுவாக உள்ளது.

இதையும் படிங்க:  புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்? மேலும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டுமா?

மேற்கூறிய மாற்றுப்பாதை 04.02.2024 முதல் 10.02.2024 வரை ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios