Asianet News TamilAsianet News Tamil

‘ஆரம்பமே இப்படியா, காதுல கேட்க முடியல’ மதனின் ஆபாச ஆடியோவை கேட்டு அதிர்ச்சியான நீதிபதி.. வழக்கறிஞருக்கு டோஸ்!

யூ டியூப்பர் மதனின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Toxic madhan youtube audio submitted to high court judge
Author
Chennai, First Published Jun 17, 2021, 12:07 PM IST

மதன், டாக்ஸிக் மதன் 18 பிளஸ் ஆகிய யூடியூப் சேனல்களில் விளையாட்டின் டிப்ஸ், டிரிக்ஸ் சொல்லிக் கொடுப்பதாக கூறி சிறுவர், சிறுமிகளிடம் மிகவும் ஆபாசமாக பேசி வந்த மதன் என்ற நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் யூ-டியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதாக மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு, ஜூன் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

Toxic madhan youtube audio submitted to high court judge

இந்நிலையில் முன் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சக யூ-டியூப் போட்டியாளர்களால் அளித்த புகாரின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தான் பாதிக்கப்பட்டதாக எந்த தனி நபரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என வாதிட்டார். 

Toxic madhan youtube audio submitted to high court judge

இதனைக் கேட்ட நீதிபதி மதன் பேசியுள்ள யூ-டியூப் வீடியோக்களை கேட்டுள்ளீர்களா? அதனை காது கொடுத்து கேட்க முடியவில்லை என பலரும் புகார் தெரிவித்துள்ளனர் எனக்கூறினார். அதே சமயத்தில் போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதன் ஆபாச பேச்சுக்கள் மூலமாக குழந்தைகளை தவறான வழியில் செயல்படுத்தும் விதமாகவும், பெண்களை கீழ்தரமாகவும் பேசி வந்துள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் விதமாக அவருடைய யூ-டியூப் சேனல் செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டினார். 

அதுமட்டுமின்றி மதனின் யூ-டியூப் சேனலில் 30 சதவீதம் பேர் மாணவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். எனவே தலைமறைவாக இருக்கும் மதனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. 

Toxic madhan youtube audio submitted to high court judge

மேலும் மதன் பேசிய யூ-டியூப் பதிவின் ஆடியோ நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைக் கேட்ட நீதிபதி, மதனின் பேச்சுக்கள் தொடக்கம் முதலே இவ்வளவு கேவலமாக இருக்கிறது. மதன் பேசியதைக் கேட்டுவிட்டு வந்து நாளை ஆஜராகுங்கள் என மதன் வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios