ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தண்ணீர் பஞ்சத்தால் கழிப்பறைகள் மூடல்..? நோயாளிகள் அவதி..!
சென்னையில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் பல கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னையில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் பல கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைதவிர தினமும் வெளிநோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் நோயாளிகள் இந்த பகுதியில் உள்ள கழிப்பறைகளையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், சென்னையில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் பல கழிப்பறைகள் மூடப்பட்டு இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. தண்ணீர் பற்றாக்குறையால் தான் கழிப்பிடங்கள் மூடப்பட்டதாகவும் தகவல் வேகமாக பரவின.
இதனிடையே, வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கான கழிவறைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளது.