இன்று சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா? 5 மணி நேரம் வரை கரண்ட் இருக்காது..!
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புக் காரணமாக மாதம் ஒருமுறை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.
சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், வியாசர்பாடி, பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;- தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புக் காரணமாக மாதம் ஒருமுறை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 2 ம் தேதியான இன்று சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம்பரம் பகுதி
பல்லாவரம் ரயில்வே ஸ்டேசன் ரோடு, ஐ.எச்.எப்.டி குடியிருப்பு, சாவடி தெரு, பழைய டிரங்க் ரோடு டி.என்.எஸ்.சி.பி பெரும்பாக்கம் வரதாபுரம் மெயின் ரோடு, நேசமணி நகர், செட்டிநாடு வில்லா, மால்ஸ், ஆர்.சி.பிளாசம், ஸ்டெப் ஸ்டோன், காஸ்கிராண்ட்.
வியாசர்பாடி பகுதி
மாத்தூர் இன்டஸ்ட்ரியல் கார்டன், பார்வதிபுரம், ஜெயா நகர், சின்ன மாத்தூர் அனைத்து பகுதி, சி.பி.சி.எல்.நகர், எம்.எம்.டி.எ-1வது மெயின் ரோடு, ஆவின் குடியிருப்பு, சர்வோதையா மருத்துவமனை, ஆவின் பால் பண்ணை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்
பொன்னேரி பகுதி
கும்மிடிபூண்டி சிப்காட்எஸ்.என்.III இன்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ் பகுதி, டி.என்.எச்.பி. பைபாஸ் ரோடு, பில்லா குப்பம், ஜி.ஆர்.கண்டிகை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.