Asianet News TamilAsianet News Tamil

இது கூடவே கூடாது…. இதைச் செய்தால் நான் நிச்சயம் வரமாட்டேன்… உடன்பிறப்புகளை எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தாம் வெளிமாவட்டங்களுக்கு செல்லும்போது டிஜிட்டல் பேனர்களை பார்த்ததாகவும், அப்படி வைப்பதால் அரசியல்வாதிகளுக்கு என்ன மகிழ்ச்சி வந்துவிடபோகிறது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

TN govt clarfiy cm stands on baner in high court
Author
Chennai, First Published Oct 5, 2021, 3:56 PM IST

தாம் வெளிமாவட்டங்களுக்கு செல்லும்போது டிஜிட்டல் பேனர்களை பார்த்ததாகவும், அப்படி வைப்பதால் அரசியல்வாதிகளுக்கு என்ன மகிழ்ச்சி வந்துவிடபோகிறது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திமுக அமைச்சர் பொன்முடி கலந்துகொண்ட திருமண விழாவிற்கு கொடிக்கம்பம் நட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். இதையடுத்து பேனர் கலாச்சரத்தை கைவிடும்படி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, சிறுவன் உயிரிழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், கட்சிக் கொடிகள், பேனர்கள் கட்டுவதற்கு வரைமுறைகளை வகுக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

TN govt clarfiy cm stands on baner in high court

தலைமை நீதிபதி தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்கக் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பேனர் வைத்தால் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என முதலமைச்சர் அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் திருமண விழாக்களில் பேனர்கள் வைப்பது கலாச்சாரமாகிவிட்டது என்றும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

TN govt clarfiy cm stands on baner in high court

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தாம் வெளியூர் சென்றபோது பல இடங்களில் டிஜிட்டல் பேனர்களை பார்த்ததாகவும் இப்படி வைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு என்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது என்றும் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆறு வாரங்க்ளுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios