சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  12 ரூபாய் உயர்ந்து காணப்படுகிறது. அதாவது தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணங்களால் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.   பெரும்பாலும் தங்கத்தில் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவருவதை நாம் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம். தங்கத்தின் மீதான சுங்கவரி,  சர்வதேச சந்தைகளில் தங்கம் வெள்ளிமீதான விலையேற்றம்,  மற்றும் தங்கம் வெள்ளிகளின் அவுன்ஸ் மதிப்பீட்டில்  ஏற்படும் மாற்றம் போன்றவற்றால் அதன் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு பனிரெண்டு ரூபாய்  உயர்ந்து காணப்படுகிறது அதன்படி, ஒரு சவரன் தங்கம் 29 ஆயிரத்து 512 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதன்படி தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தின் படி சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 3. 689 ரூபாயாகவும் 8 கிராம் 29. 512 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. அதே 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 4, 024 ரூபாயாகவும்  8 கிராம் 32, 192 ரூபாயாகவும் உள்ளது.  வெள்ளியின் விலை ஒரு கிராம் 48 ரூபாயாகவும்,  ஒரு கிலோ  48,000 ரூபாயாகவும் உள்ளது