தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சில இடங்களில் மட்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை திருவான்மியூர் ஓடைகுப்பம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது அதிமுக, திமுகவினர் இடையே மோதல் வெடித்தது. 

சென்னை திருவான்மியூரில் ஓடைகுப்பம் பகுதியில் வாக்குப்பதிவின் போது வாக்கு பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டதை அடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திமுக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சில இடங்களில் மட்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை திருவான்மியூர் ஓடைகுப்பம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது அதிமுக, திமுகவினர் இடையே மோதல் வெடித்தது.

இதனையடுத்து, வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்த கதிரவன் என்ற திமுக பிரமுகர், கயல்விழியின் கணவர் ஜெயக்குமார் மற்றும் அடியாட்களுடன் வந்து வாக்கு இயந்திரத்தை அடித்து நொறுக்கியது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கதிரவன் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் தலைமறைவான நிலையில், இருவரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது அரசாங்க சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.