Asianet News TamilAsianet News Tamil

உடன் பிறந்த சகோதரர் போன்று என்னை பார்த்தார்.. ராமதாஸ் உடனான பழைய நட்பை வெளிப்படுத்திய திருமாவளவன்

மருத்துவர் ராமதாஸ்  தனக்கு அவ்வளவு நெருக்கமாக இணக்கமாக இருந்தார் என தெரிவித்த திருமாவளவன், ஒரு உடன் பிறந்த சகோதரர் போன்று என்னை கையில் பிடித்துக்கொண்டு வழி நடத்துபவராக இருந்தார். அப்போது அவர் பேச்சைக் கேட்டு தான் உண்ணாவிரதத்தை கைவிட்டேன் என கூறினார். 
 

Thirumavalavan said that Ramadoss looked after him like a brother KAK
Author
First Published Mar 11, 2024, 9:22 AM IST

இலங்கையில் போர்- திருமா போராட்டம்

எழுத்தாளர் அஸ்வகோஷ் எ இராஜந்திர சோழன் அவரின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில்  நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், நம் அடையாளம் மண்,மொழி ஆகியவை தான், ஐயாவின் நூல்களை அரசு உடமை ஆகவேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார்கள், அதனை நானும் வரவேற்கிறேன்,

நிச்சயமாக இதன் வேலையை நானும் , வேல்முருகன் நிச்சயமாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சொல்வோம் என கூறினார்.  அப்போது இலங்கை போர் தொடர்பான பழை நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 2009 ஆண்டு பிரபாகரனை சிங்கள படையினர் சூழ்ந்துள்ளார்கள், அவர் அப்போது கைது செய்யப்படலாம், அல்லது பிணமாக இருக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். தகவல் அறிந்து தலைவர்களை சந்தித்தேன். 

Thirumavalavan said that Ramadoss looked after him like a brother KAK

போரை நிறுத்த முடியவில்லை

பாமக தலைவர் ஐயா ராமதாஸ் அவர்களை சந்தித்து பேசினேன், திராவிட கழகம் ஆசிரியர் விரமணியிடம் இதை சொல்லலாம் என மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை கூறினார். அப்போது அவர் முதலமைச்சரிடம் இதனை பேசுவார் என்று தெரிவித்தார். இதனையடுத்து மருத்துவர் ராமதாஸ்,வீரமணி மற்றும் நான் ஆகிய முவரும் கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அவர்களை சந்தித்து பேசினோம். அப்போது  இலங்கை யுத்தம் தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது, இதனையடுத்து கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தோற்று போனேன், குடும்பமா, குழந்தைகளா யாரும் இல்லை, உயிர் போனாலும் பரவாயில்லையென உண்ணாவிரம் இருக்க திட்டமிட்டேன். 

 

 

சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

பிறகு நான் இரவு நேரத்தில் தாம்பரம் தாண்டி செல்லும் போது ஒரு இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்தேன்.  இலங்கையில் நடைபெறுகின்ற போரை இந்திய அரசு நிறுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தேன். இரண்டு நாள் தண்ணீர் கூட அருந்த வில்லை, உயிரை துறந்தாலும் பரவாயில்லையென தொடர்ந்து உண்ணாவிரம் இருந்தேன். அப்போதே அமைச்சர் ஆற்காடு வீராசாமி வந்தார். திராவிட கழக தலைவர் கி.வீரமணி வந்தார். மருத்துவர் ராமதாஸ் ஐயா நேரில் வந்து தண்ணீர் மட்டும் அறிந்து என்று கூறினார். சிறுநீரகம் கெட்டு விடும் என கூறினார். இதனையடுத்து அவரது பேச்சை கேட்டு தண்ணீர் அருந்தினேன்,

Thirumavalavan said that Ramadoss looked after him like a brother KAK

தண்ணீர் மட்டும் குடித்தேன்

3வது நாள் தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் மட்டும் போராட்ட களத்தில் இருந்தோம். தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. பல்வேறு தலைவர்கள் வந்தார்கள் வாழ்த்தினார்கள். திமுக அரசிற்கு காவல்துறை அறிக்கை அனுப்பியது. அதில் திருமாவளவன் திமுககூட்டணியில் இருந்து கொண்டு அதிமுகவுடன் கை கோர்க்கிறார் என தகவல் தெரிவித்தனர்.  பிறகு மீண்டும் மருத்துவர் ராமதாஸ் என்னை சந்தித்தார், அவர் சொன்னால் தான் நான் கேட்பேன் என்று அனைவருக்கும் தெரியும், அப்போது நான் கூறினேன் வேறு கட்சிகள் வேண்டாம், விடுதலை சிறுத்தையும், பாமகவும் இணைந்து போராட்டத்தை நடத்துவோம் அதற்கான செயல்திட்டத்தை கூறுங்கள் என தெரிவித்தேன். 

Thirumavalavan said that Ramadoss looked after him like a brother KAK

என்னை கையில் பிடித்துக்கொண்டு வழி நடத்துபவராக ராமதாஸ்

அப்போது பேசிய ராமதாஸ் 10 நாட்களில் போராட்டம் வெடிக்கும், கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்தார்.  இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஒரு தந்தையைப் போன்று நீங்கள் கூறுகிறீர்கள், எனவே  போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன் என்று கூறினேன். மருத்துவர் அப்போது எனக்கு அவ்வளவு நெருக்கமாக இணக்கமாக இருந்தார்,

ஒரு உடன் பிறந்த சகோதரர் போன்று என்னை கையில் பிடித்துக்கொண்டு வழி நடத்துபவராக இருந்தார். அப்போது அவர் பேச்சைக் கேட்டு தான் உண்ணாவிரதத்தை கைவிட்டேன். மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் அன்று கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் போராட்டத்தை நிறுத்தினேன், நான்கு நாட்களுக்கு இந்த போராட்டம் நடைபெற்றதாக திருமாவளவன் நினைவு கூர்ந்தார்.

இதையும் படியுங்கள்

கடைசியாக ஓபிஎஸ்யை கூட்டணியில் சேர்த்துக்கொண்ட பாஜக..! எந்த சின்னத்தில் போட்டி தெரியுமா.?

 

Follow Us:
Download App:
  • android
  • ios