Chennai : சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு.. மிரட்டல் சம்பவத்தால் பரபரப்பு !!
டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பி சென்னை மெரினா கடற்கரை உள்பட 30 இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்பட மொத்தமாக 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், தற்போது மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் பெசன்ட் நகர் கடற்கரைக்கு விரைந்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபரிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது அநேகமாக பொய் மிரட்டலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..