தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனினும் கடந்த இரண்டு தினங்களாக, கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், இது வடகிழக்கு திசையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 26 ஆம் தேதி தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை   ஃபானி புயலாக மாறி, ஏப் 30 மற்றும் 1 ஆம் தேதிகளில் தமிழகத்தில் கரையை கடக்க உள்ளது என ரெட் அலர்ட் விடுத்துள்ளார். 

இதனால் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புயல் உருவான பிறகு காற்று மணிக்கு 115  கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் சில தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.