VIDEO | சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசு! காசிமேடு கபிலானான பாக்ஸர் ''ஆறுமுகம்'' காலமானார்!
சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசும், காசிமேடு கபிலானான பாக்ஸர் ''ஆறுமுகம்'' காலமானார். உடல்நலக்குறைவால் இறந்தவரின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசும், காசிமேடு கபிலானான பாக்ஸர் ''ஆறுமுகம்'' காலமானார். உடல்நலக்குறைவால் இறந்தவரின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
குத்துச்சண்டைக்கு பெயர் போன வடசென்னையில் குத்துச்சண்டையில் கோலோச்சி வந்தவர் சார்பட்டா பரம்பரையின் வீரர் ஆறுமூகம் காலமானார். அவருக்கு வயது 72. சுமார் 128 தொழிற்முறை குத்துசண்டை போட்டிகளில் போட்டியிட்டு அதில் 128குத்து சண்டைகள் அளவில் எதிர் வீரரை நாக்அவுட் முறையில் வீழத்தி வெற்றி பெற்றுள்ளார்
கடந்த மூன்று மாதங்களாக கல்லீரல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் இருந்த ஆறுமுகம், இன்று உயிரிழந்தார். மறைந்த, அவரது உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அவரது சமகால சார்பட்டா பரம்பரை வீரர்ரகள் மற்றும் மற்ற பரம்பரையினரும் அஞ்சலி செலுத்தினர். திரை பிரபலமான வில்லன் நடிகர் சாய்தீனா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
15−20 ஆண்டுகாலம் குத்துச்சண்டையில் முடிசூடா மன்னரான, இவரது கதையை தழுவியே ''சார்பட்டா பரம்பரை'' படத்தில் ஆர்யாவின் கபிலன் என்ற கதாபாத்திரம் படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.