Asianet News TamilAsianet News Tamil

Chennai Crime: குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்த மாமியார்; தலையில் கல்லை போட்டு கதையை முடித்த குடிமகன்

குரோம்பேட்டை அருகே குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்த மாமியாரை, மருமகனே தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The incident of son-in-law's murder of mother-in-law in Chennai has created a sensation vel
Author
First Published Jun 29, 2024, 3:59 PM IST

சென்னை குரோம்பேட்டை, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 65). இவரது மனைவி சிவபூஷணம் (வயது 60). வேணுகோபால் சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்த போது இறந்து விட்ட நிலையில் அவருக்கான ஓய்வூதியதிய பணம் 20 ஆயிரம் ரூபாய்யை சிவபூஷணம் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

சிவபூஷணத்திற்கு மூன்று ஆண் மகன்களும், சசிகலா என்ற ஒரு பெண் உள்ள நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு சசிகலா அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வந்த ராமகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் ராமகிருஷ்ணன்  குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு மனையிடம் தொடர்ந்து தகராறுசெய்து வந்ததாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சியை தொடர்ந்து பொள்ளாச்சியில் கள்ளச்சாராயம்? மது குடித்த இருவர் மருத்துவமனையில் அனுமதி

இதனால் இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு சசிகலா கணவரின் தம்பியுடன் சென்று விட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுடன் அவரது மாமியாரான சிவபூஷணம் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வேலைக்கு சென்று அதில் வரும் பணத்தை வைத்து குடிப்பதோடு மாமியாரின் ஓய்வூதிய பணத்தை சிறுக சிறுக வாங்கி குடிப்பதையே வேலையாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று குடிப்பதற்கு மாமியார் சிவபூஷணத்திடம் 200 ரூபாய் பணம் கேட்ட போது பணம் தர முடியாது என கராராக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் படுத்தவாறு டிவி பார்த்துக் கொண்டிருந்த சிவபூஷணம் மீது வீட்டில் வெளியே இருந்த சுமார் 10 கிலோ எடை கொண்ட கல்லை எடுத்து வந்து தலையில் போட்டு விட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த மாமியார் அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தியை அறுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு வேலைக்கு சென்றிருந்த அவரின் பேரன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் இருந்த பாட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பாட்டியிடம் கேட்டபோது உனது தந்தை ராமகிருஷ்ணன் தான் என் தலையில் கல்லை போட்டதாக தெரிவித்துள்ளார். உடனே பாட்டியை மீட்டு  குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். 

4 பெண்களுடன் குடும்பம் நடத்தியும் ஆசை தீரல; 17 வயது சிறுமியுடன் ஓட்டம் பிடித்த நபர் போக்சோவில் கைது 

இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற ராமகிருஷ்ணனை தீவிரமாக தேடி வந்த போது பல்லாவரம் பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு எந்த பதற்றமும் இன்றி வெளியே வந்த போது போலீசார் கைது செய்து குரோம்பேட்டை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் குடிப்பதற்கு பணம் தரவில்லை எனவும், நானும் என் மனைவியும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்தபோது எனக்கு குடிப்பழக்கம் இருந்ததால் என்னுடைய மாமியார் எங்களைப் பிரித்து எனது தம்பியுடன் அனுப்பி வைத்தும் கடந்த 10 வருடங்களாக என் மனைவியும், என் தம்பியும் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் எனது மாமியாரை கொலை செய்தால் அவரை பார்க்க என் மனைவி வருவாள் என எண்ணி கொலை செய்யும் நோக்கத்தோடு தலையில் கல்லை போட்டதாக குற்றவாளி பகீர் வாக்குமூலம் அளித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios