Asianet News TamilAsianet News Tamil

மகிழ்ச்சியான செய்தி... பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு.. உயிரிழப்பு புதிய அச்சம்..!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,68,285-ஆக உயர்ந்துள்ளது.

The good news is ... the number of survivors is rising sharply more than the impact
Author
Tamil Nadu, First Published Aug 4, 2020, 7:06 PM IST

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,68,285-ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் இன்று  5,063 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,908 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 28 பேர் அடங்குவர். இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,285ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 55,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 28,92,395 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

The good news is ... the number of survivors is rising sharply more than the impact

சென்னையில் இன்று 1,023 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,999ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,041 பேர் ஆண்கள், 2,022 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,62,476 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,05,782 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. 

The good news is ... the number of survivors is rising sharply more than the impact

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 108 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 4,349ஆக உயர்ந்துள்ளது. இதில், தனியார் மருத்துவமனையில் 65 பேரும், அரசு மருத்துவமனையில் 60 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து இன்று 6.501 பேர் உட்பட இதுவரை 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர். 

The good news is ... the number of survivors is rising sharply more than the impact

மேலும், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசின் பன்முக நடவடிக்கையால் குணமடைந்தோர் விகிதம் 77.8 சதவீதம் ஆக உள்ளது. கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு. கொரோனா குறித்த ஆதாரமற்ற தகவல்களைசமூக வளைதளத்தில் பரப்பக்கூடாது. அவதூறுகளை பரப்பினால் சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios