Asianet News TamilAsianet News Tamil

அத்திவரதர் வைபவத்துக்க அன்னதானம் வழங்க நன்கொடை அளிக்கலாம்… - தமிழக அரசு அறிவிப்பு

அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை கொடுக்க விரும்புவோர் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

The donor can donate for the benefit of the Viceroyalty ... - Announcement of Government of Tamil Nadu
Author
Chennai, First Published Jul 25, 2019, 12:28 AM IST

அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை கொடுக்க விரும்புவோர் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

The donor can donate for the benefit of the Viceroyalty ... - Announcement of Government of Tamil Nadu

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் அனந்தசரஸில் இருந்து எழுந்தருளியுள்ள அத்தி வரதரின் வைபவம், 2019க்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், காவல் துறை இயக்குநர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர், இந்து சமய அறநிலைய ஆட்சி துறை ஆணையர், நகராட்சி நிர்வாக ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருடன் கோயிலில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள் ஏற்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் முதல்வர், தொலை தூரத்தில் இருந்து அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு, அன்னதானம் வழங்குவதற்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி, அன்னதானத்திற்கு நிதி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

மேலும், அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை கொடுக்க விரும்புவோர், கீழ்க்கண்ட பெயருக்கு காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ அனுப்பலாம்.

காசோலை அல்லது வரைவோலை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:

செயல் அலுவலர், தேவராஜ சுவாமி கோயில், காஞ்சிபுரம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios