கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளி பஸ், சாலையில் ஓடி கொண்டிருந்தபோது, திடீரென கவிழ்ந்தது. அப்போது அதில் பயணம் செய்த ஆசிரியை மற்றும் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனியார் பள்ள செயல்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை, பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் அழைத்து வந்து, மீண்டும் வீட்டில் விடுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டனர். அனைவரும் இறங்கிய பின்னர், ஒரு ஆசிரியையும், ஒரு சிறுவனும் கடைசியாக பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அந்த பஸ் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த ஆசிரியை மற்றும் சிறுவன் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து, பஸ்சில் இருந்த  பேரையும் மீட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.