ஆசிரியர் தகுதித்தேர்வும், பி.எட். இறுதியாண்டு தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவி, மாணவிகள் குழப்பம் அடைந்துள்ளனர். 

2019-ம் ஆண்டுக்கான டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை ஆன்லைன் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது. ஆன்லைனில் 6 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தேர்வு நடக்கும் தேதி திடீரென்று நேற்று அறிவிக்கப்பட்டது.

 

அதாவது ஜூன் 8-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முதல் தாளும், 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 தாளுக்கான தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கும் ஜூன் 8-ம் தேதியே பி.எட் இறுதியாண்டு தேர்வு நடைபெற உள்ளதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.